Tuesday, August 17, 2010

மரணத்தின் மறுபக்கம் - ஆகத்து பதினேழு

ஏரிக்கரை ஓரம்,

தனியே

அவளுக்காக 

காத்திருப்பு.

பொழுது போகவில்லை. 

ஒரு படகு. 

படகில் ஒரு பக்கம் வண்ணக்கலவை,

மறுபக்கம் - ஏதோ எழத்துக்கள்.

படிக்கமுடியவில்லை.

காத்திருந்தவன் முடிவெடுத்தான் - படித்து விடுவது என்று.

ஏரியில் குதித்தான்.

நீந்தினான். ஏரியின் மத்திக்கு சென்று 

என்ன எழுதியுள்ளது என்று படித்தான்.

"ஏரியில் முதலைகள் - நீந்தாதீர்கள்".

நீதி: பெண்களுக்குகாக காத்திருந்தால் மரணம் நிச்சயம். 

Wednesday, July 7, 2010

நேர்மை - யூலை ஏழு

நேர்மையாக இருப்பதால் 

ஒரு

நன்மை உண்டு. 

பல எதிரிகள்

உருவாகலாம்;

ஆனால், 

போலியான நண்பர்கள் 

தோன்ற மாட்டார்கள். 

Wednesday, June 30, 2010

புரிதல் - யூலை ஒன்று.

நட்பு, அன்பு, காதல்......

இவை எல்லாம் 

வெறும் 

வார்த்தைகள்தான். 

 

நட்பு, அன்பு, காதல்......

இவை எல்லாம் 

வெறும் 

வார்த்தைகள்தான்.

 

எதுவரையில் என்றால், 

யாராவது ஒருவர் 

உங்கள் வாழ்க்கையில் உட்புகுந்து

இவை பற்றிய புரிதலை உங்களுக்கு 

ஏற்படுத்தும்வரை. 

 

அதுவரையில் இவை வெறும் வார்த்தைகளே.